திமுக வெற்றி பெற்றது திறைமையினால் அல்ல கிருஸ்துவர்கள் இஸலாமியர்கள் போட்ட பிச்சை என்றும் ஹிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன் என்றும் முடிந்தால் எங்களை தொட்டு பார், எங்களை ஒரு மயிரும் புடுங்க முடியாது, பூமா தேவி அழுக்கானவள்,பிரதமர் மோடி, அமித் ஷா புழு புழுத்து தான் இறப்பார்கள் என வாய்க்கு வந்தபடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஓடி ஒளிந்து கொண்டார். பாதிரியார் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்தது தமிழக பாஜக. இதனால் விஷயம் பெரிய அளவில் வெடித்தது. தமிழக அரசிற்கு இது அதிர்ச்சியாக அமைந்தது. உடனடியாக காவல்துறை தொடர் தேடுதல் வேட்டையில் இறங்கியது. தேடுதல் வேட்டையில் மதுரை அருகே கள்ளிக்குடியில் வைத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாக கைது செய்யப்பட்டுள்ளார். 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய கோரி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது.
குமரி மாவட்டத்தில் , அருமனை அருகே பனங்கரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அருமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கண்டன கூட்டத்தில் அருமனை கிறிஸ்தவ இயக்கத் தலைவா் சி.ஸ்டீபன், பாதிரியார் ஜாா்ஜ் பொன்னையா ஆகியோா் தலைமை வகித்தனா். காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கே.ஜி. ரமேஷ்குமாா், மதச்சாா்பற்ற ஜனதாதள நிா்வாகி ஜாண் கிறிஸ்டோபா், எஸ்.டி.பி.ஐ நிா்வாகி சுல்பிகா்அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா்சையது அலி, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிா்வாகி நூா்தீன், முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகி காதா் மைதீன், அருமனை பாக்கியபுரம் தேவாலய இணை பங்குத்தந்தை அமல்ராஜ், சிபிஐஎம்எல் கட்சியின் மாவட்டத் தலைவா் அந்தோணிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், ‘தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது என்றதுடன், பிரதமர் மோடி, அமித் ஷா பற்றியம் இந்துக்கள் பற்றியும் வாய்க்கு வந்தபடி ஏசினார்அவரின் பேச்சு மதக்கலவரத்தை உண்டாக்கும் வகையில் அமைந்தது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுதும் பல இடங்களில் ஜார்ஜ் பொன்னையா மீது புகார் செய்யப்பட்டது. பாஜக இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினார்கள். அருமனை காவல்நிலையத்தில் , அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிரியார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் ஹிந்து சகோதர, சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்போம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் பாதிரியார் கைது செய்யப்படவில்லை. திடீரென அருமனையில் டி.ஐ.ஜி., பிரவின்குமார் தலைமையில் பாதிரியார் தங்கி இருக்கும் இடத்தினை முகாமிட்டனர்.எதிர்பாராத பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பின்புறம் கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமின் கிடைத்த பின்தான் ஊர் திரும்புவார் எனவும் கூறப்பட்டது.பாதிரியாரை உடனடியாக கைது செய்யா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக, ஹிந்து மகா சபா உள்ளிட்ட பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில்மதுரை அருகே கள்ளிக்குடியில் வைத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாக கைது செய்யப்பட்டுள்ளார். 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய கோரி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது.