கன்யாகுமரி மாவட்டத்தின் அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜாா்ஜ் பொன்னையா பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக பேசினார். மேலும் இந்துக்கள் எங்களை ஒன்றும் பண்ணமுடியாது ஒரு மயிரும் புடுங்க முடியாது என மத மோதலை உண்டாக்கும் விதத்தில் பேசினார்.
அவர் பேசுகையில் அந்த மேடையில் இருந்த யாரும் அவரை தடுக்கவில்லை. . காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கே.ஜி. ரமேஷ்குமாா், மதச்சாா்பற்ற ஜனதாதள நிா்வாகி ஜாண் கிறிஸ்டோபா், எஸ்.டி.பி.ஐ நிா்வாகி சுல்பிகா்அலி, தமுமுக நிர்வாகி சையது அலி,PFI நிா்வாகி நூா்தீன், முமுக நிா்வாகி காதா் மைதீன், அருமனை பாக்கியபுரம் தேவாலய இணை பங்குத்தந்தை அமல்ராஜ், சிபிஐ எம்எல் கட்சியின் அந்தோணிமுத்து உள்ளிட்டோா் மேடையில் இருந்தது குறிப்பிட தக்கது.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலானதை தொடர்ந்து பாதிரியாரை கைது செய்ய கூறி தமிழகம் முழுவதும் குரல்கள் எழுந்தது. முதலில் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கியதுதமிழக அரசு. இந்த நிலையில் பா.ஜ.க பாதிரியாருக்கு எதிராக களத்தில் இறங்கியது. தமிழக பா,ஜ,க தலைவர் அண்ணாமலை அவர்கள் பாதிரியாரை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத தமிழக அரசு உடனடியாக பாதிரியாரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.
தமிழக பா.ஜ.க இந்த பாதிரியார் விஷயத்தினை சும்மா விடுவதுபோல் தெரியவில்லை. பாதிரியாரை கைது செய்யாவிட்டால் இந்துக்கள் ஒற்றுமைக்கு வழி வகுத்துவிடும் அது பா.ஜ.கவிற்கு சாதகமாக அமையும் என உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது தமிழக அரசு. இதன் பின்னர் தான் நடவடிக்கையில் இறங்கியது தமிழக அரசு.
கைதிலிருந்து தப்பிக்க பாதிரியார் மதுரையிலிருந்து சென்னை செல்வதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கமதுரை அருகே உள்ள கள்ளிக்குடியில் வைத்துபாதிரியார் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார் பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல் துறை.
மேலும் பாஜக தமிழக தலைவராக அண்ணமலை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் அறிவித்த முதல் ஆர்ப்பாட்டம் வெற்றியாக அமைந்துள்ளது. மேலும் பாதிரியாரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இதற்கு முன் அண்ணாமலை அவர்கள் ஒரு பேட்டியில் “மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் பா.ஜ.கவின் யாத்திரைகள். தி.மு.க விற்கு பா.ஜ.க தான் எதிரி” என குறிப்பிட்டு பேசினார் அவர் பேசியது இன்று உண்மையாகி உள்ளது திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வருகிறது பாஜக.