‘சார்பட்டா’ பரம்பரை நாக் அவுட் ஆறுமுகம்,ராக்கி பிராஸ் போன்றவர்களே எம்ஜிஆரை புகழ்கிறார்கள்..அவரை ஒரு அடையாளமாக காட்டுகிறார்கள்.. ஆனால் சினிமாவுல பொய் வரலாறு சொல்லி மக்களை திசை திருப்ப நினைத்துள்ளார் ப. ரஞ்சித். சுந்தர் ராஜ் சோழன் அவர்கள் ரஞ்சித்தின் முகத்தை கிழித்துள்ளார் அவர் கூறியுள்ளதாவது, வயதான சிலம்ப ஆட்டக்காரர்களுடன் பேசி பழைய கதைகளை கேட்பேன்.அவர்களுடைய அரசியல் தரப்பென்ன,யாருக்காக நின்றார்கள்,எதற்காக வாதாடினார்கள் என்பதை பற்றியெல்லாம்.அப்படி பலர் சொன்னது எம்ஜிஆரை உயர்வாகத்தான்.
‘வாத்தியார்’ என்ற உச்சரிப்பு மட்டும்தான் அவர்கள் வாயிலிருந்து வரும்.கடலூரில் எம்ஜிஆர் தெருவில் இறங்கி,எதிரிகளை சிலம்பம் சுற்றி விரட்டியதாக ஒரு நிகழ்வை குறிப்பிடுவார்கள்.எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது,எம்ஜிஆர் மீது கொண்ட பற்றுதல் காரணமாக இந்த தரப்புகள் அப்படியே அதிமுக பக்கம் சாய்ந்திருக்கிறது.
1967 லேயே பாக்ஸிங் காட்சிகளை வைத்து ‘காவல்காரன்’ படம் வந்துவிட்டது.எம்ஜிஆருடைய பல படங்களில் ‘குஸ்தி’ ‘கத்தி சண்டை’ ‘சிலம்பம்’ என எல்லா சண்டைகளும் தனித்த அடையாளம் மிக்கவை.தனது ரசிகன் மது,புகைக்கு அடிமையாகக் கூடாது,உடலை உறுதியோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சினிமாவின் வழி பிரச்சாரமே செய்தவர் எம்ஜிஆர்.
‘உழைக்கும் கரங்கள்’ படம் மிசா காலத்தில் வந்த படம்தான்.அதில் குடிப்பவனை அடித்து உதைத்து ‘அண்ணா’ மேல் ஆணையாக இனி குடிக்கமாட்டேன் என்று சொல்லச் சொல்லி சத்தியம் வாங்குவார்.செருப்பு சத்தம் கேட்டாலே சீட்டாடுபவன்,குடிப்பவன்,புரளி பேசும் கூட்டமே ரங்கன் வந்துவிட்டான் என ஓடும்.
உண்மையிலேயே எம்ஜிஆர் முன்னால் குடித்துவிட்டு போனவர்களை அடித்துதான் விரட்டியிருக்கிறார்,அவர்களை ஒதுக்கி வைத்துள்ளார் என்றுதான் கதைகள் உலவுகிறது.வெறித்தனமான தன் ரசிகர்களுக்கு அவர் கடத்திய செய்தி மது,புகை போன்ற உடலை கெடுக்கும் பழக்கங்களில் ஈடுபடக்கூடாது என்பதுதான் அன்றைய தேதிகளில் இருந்த பலதரப்பட்ட விளையாட்டு வீரர்கள் எம்ஜிஆரை ஆதர்ஷமாக வைத்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.இந்த அடிப்படை உண்மையை திரித்து தி.மு.க ஏதோ வீரர்களை,தனி மனித ஒழுக்கத்தை ஊக்குவித்தது போலவும் எம்ஜிஆர் அதை கெடுத்தது போலவும் ரஞ்சித்,”சார்பட்டா” படத்தில் காட்டியிருப்பது அவதூறு.
திமுகவில் அப்படியிருக்கிறவர்கள் இருந்தார்கள் என்பதே,எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்ததன் தாக்கமே ஒழிய,அதற்கு தி.மு.க என்கிற கட்சி காரணமில்லை.எம்ஜிஆரின் சமகாலத்தில் மட்டுமல்ல,எந்த காலத்திலும் அவரை எதிர்மறை பிரச்சாரத்தின் வழியே வீழ்த்திவிடலாம் என்று நினைத்தவன்,எந்த துறையிலும் வீழ்ந்து போனான் என்பதே சரித்திரம்.
குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
1980 ம் ஆண்டு தமிழ் நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்கு குத்துச் சண்டை மீது காதல் கொண்டிருந்தார்.
இன்று வரை ஒட்டப்பட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஆடு மாடு தின்றால் தான் உண்டே தவிர,அதை கிழிக்கவோ? அதன் மீது இன்னொரு போஸ்ட்டர் ஒட்டவோ ஒரு வஸ்தாது பிறக்கவில்லை என்பதே நிஜம்..எவனும் முட்டுக் கொடுத்து நிற்கவில்லை எம்ஜிஆர் என்கிற பிம்பம்..எதிரி மட்டுமல்ல,துரோகியாலும் எதுவும் இத்தனை காலம் புஎதையும் செய்ய முடியவில்லை..இனிமேலும்அவரை ஒன்றும் பண்ண முடியாது. இது தான் நிதர்சனம்
மேலும் தி.மு.க தலைவர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்கிற விவாதம் இருந்து வந்த நிலையில் . 1975-ம் ஆண்டும் தொடர்ந்து அடுத்த வருடமும் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது பலர் சிறை சென்றனர். அப்படி திமுக தலைவராகவும் முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மிசா கைதியாக சிறைக்கு செல்லவில்லை. மிசா சட்டம் அமலில் இருந்த போது சிறைக்கு சென்றார். அவரை மிசா தியாகியாக கருத முடியாது. அப்படி அவர் சென்றிருந்தால் அதற்கு உண்டான ஆதாரத்தை சமர்பிக்கவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். ‘சார்பட்டா’ பரம்பரை படத்தில் ஸ்டாலின் மிசா கைதி என சொல்லியுள்ளார்கள். இதுவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆகா மொத்தம் திமுகவை குஷி படுத்த படம் எடுக்கப்பட்டுள்ளது போல!
மேலும் படத்தில் இந்திராவின் 20 அம்சதிட்டத்தை எம்.ஜி.ஆர் ஆதரித்தார் என ஒரு சுவரொட்டி மூலம் ஊர்ஜிதப்படுத்த முயற்சித்து இருக்கிறார்.மிசாவை எம்.ஜி.ஆர் ஆதரித்ததாக எந்த வரலாற்று நிகழ்வுகளில் இடம் பெறவில்லை..இந்திராவை ஆதரித்தாரே தவிர அவரது கொள்கைகளை ஆதரிக்கவில்லை..இவை அனைத்தையும் சேர்த்து குழப்பி வைத்து இருக்கிறார் இயக்குனர்..
தி.மு.க ஆதரவாளரான பசுபதி மகன் வெற்றி செல்வன் சாராயம் காய்ச்சும் தொழிலை செய்வதாகவும், அவன் எம்.ஜி.ஆர் தீவிர விசுவாசியாக காட்டி இருக்கிறார்.அவர் வீட்டிலே எம்.ஜி.ஆர் புகைப்படம் இருப்பதை காட்டி சாரயம் காய்ச்சுபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் விசுவாசிகள் என்கிற மாதிரி படம் எடுத்து இருக்கிறார்..
மதுவுக்கு எம்ஜிஆர் எவ்வளவு பெரிய எதிரி என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்..அதே வேளையில் சாராயத்தை தமிழகத்தில் பிரபலப்படுத்தியவர்கள் யார் ?? என்பதையும் இந்த நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள்..
குத்து சண்டை போட்டியில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே, பல குத்து சண்டை போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியாளர்களுக்கு பரிசும் வழங்கி இருக்கிறார்.. அதோடு உலக மல்யுத்த வீரர் முகமதுஅலி சென்னை வந்த போது அவரை வாழ்த்தியும், பாராட்டியும், நேரு விளையாட்டரங்கில் குத்துசண்டையை ரசித்த புரட்சித்தலைவர் அவரது கையை பிடிச்சி தூக்கியவாறு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
கருணாநிதி குத்து சண்டையை ஊக்குவித்தது போல் ஒரு புகைப்படத்தை காட்டி இருக்கலாம். னகாட்டவில்லை.. ஏன்னா குத்து சண்டை போட்டிக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்று தெரியும். உண்மையை சம்பவத்தை படம் எடுக்கிறேன் என இதிலும் அரசியலை நுழைத்து வரலாற்றை திரித்து எழுதியுள்ளார் ரஞ்சித்.
இறுதியாக சார்பட்டா பரம்பரை என்பதும் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் யார் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது எல்லாம் வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும்.அதையும் மறைத்து விட்டார்.. சார்பட்டா பரம்பரை தான் தமிழ்நாட்டில் குத்துசண்டையில் முன்னனியில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. குத்துசண்டையை பல பரம்பரைகள் முன்னெடுத்து விளையாடி இருக்கிறார்கள்.. அதோடு அவர்கள் தங்களின் இனத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள் அப்படித்தான் இடியாப்ப நாயக்கர் பரம்பரையில் பரமசிவன் நாடாரும் குத்துச்சண்டை வீரராக இருந்தார் .
எல்லப்ப செட்டியார் பரம்பரையில் மற்ற சமுகத்தினரும் வீரர்களாக இருந்தனர்.அப்போ சார்பட்டா பரம்பரை எந்த இனத்தை சார்ந்தது விளக்குவாரா??