நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.கவின் பொது செயலாளரும் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தி.மு.கவில் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் அதனால் அதிமுகவுக்கு வந்தால் அவரை நிச்சயம் வரவேற்போம் என்று அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்ததை மறக்க முடியாது. துரைமுருகன் சாதாரண நபர் கிடையாது வடமாவட்டங்களில் அதிகம் உள்ள வன்னியர் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் சட்ட மன்ற தேர்தலில் தமிழக அரசியலில் 50 ஆண்டு காலம் அனுபவம் கொண்டவரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன் இந்தத் தொகுதியில் 10-வது முறையாக போட்டியிட்டார்.காட்பாடி தொகுதியில் முதல் முறையாக சட்டப்ரேவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரிடம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடுமையான போட்டிக்கு இடையில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது துரைமுருகனுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தபால் வாக்குகள் தான்.
இந்த நிலையில் காட்பாடி ஒன்றிய தி.மு.க. மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னையில் நேற்று (ஜூலை 26) நடந்தது. இதில் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் காட்பாடி தொகுதியில் வரும் பொன்னை, காட்பாடி யூனியன் உள்ளிட்ட பல பூத்துக்களில் தி.மு.க.,வுக்கு குறைவாகவே ஓட்டுக்கள் கிடைத்தது. என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்ததது எனக்கு தெரியும்.
அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. ஆனால் கடவுள் அருளால், கடைசி நேரத்தில் தபால் ஓட்டுக்களில் தான் நான் வெற்றி பெற்றேன். மறப்போம், மன்னிப்போம் என அண்ணா சொன்னதை போல வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறா விட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















