தமிழகத்தில் தற்போது இந்து வெறுப்பு என்பது மேலோங்கி உள்ளது. அத்தகு அரசு அலுவலர்கள் துணைபுரிவது வேதனைக்குரிய விஷயம். ஒருபக்கம் திமுக அரசு பெண்களை ஆபாசமாக பேசிய லியோனி மற்றும் கடவுள் இல்லை எனக்கூறி இந்து கடவுள்களை மட்டும் ஏளனம் செய்யும் சு.ப.வீரபாண்டியனுக்கு தமிழக பாடநூல் கழகத்தில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமியின் மருமகள் பாதிரியாரை கைது செய்ய வேண்டுமானால் போப்பிடம் அனுமதி வேணும்! கிருஸ்துவர்கள் வந்த பிறகுதான் கல்வி படிப்பறிவு கிடைத்தது என பேசுகிறார். ஏன் அதற்கு முன் சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர்கள் யார்? தமிழன் பெருமை தஞ்சை கோவில் உலகத்தில் இதுவரை எந்தகட்டிட வல்லுனர்களும் தஞ்சை கோவில் போன்று கட்டடம் கட்ட முடியவில்லை. யார் அறிவாளி. என்பது கிருஸ்துவ மதத்தை தழுவிய திமுக அமைச்சர் பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமாருக்கு எப்படி தெரியும். இப்படி பல வழிகளில் இந்து மதத்தை அழிக்க தமிழகத்தில் பகிரங்க முயற்சி நடந்தது வருவது நம் கண்முன்னரே தெரிந்து வருகிறது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் புலவனூர் கிராமத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் சர்ச் அருகில் உள்ள வீட்டு வாசலில் இந்து முன்னணி கொடியேற்ற கூடாது என மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது
கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்துமுன்னணி இளைஞரை கைது செய்த கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜனின் ஒருதலைப்பட்சமான போக்கை கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் கிறிஸ்தவ ஏவலாளியின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அந்த பெண்மணியும் இந்து முன்னணி இளைஞரும் வாசலில் தானே குடியேற்ற கூடாது வீட்டு உச்சியில் கொடியேற்றுவோம் என்று வீட்டு உச்சியில் கொடியேற்றிய தரமான சம்பவம் செய்துள்ளதுள்ளார்கள்.
வீட்டு வாசலில் கொடி ஏற்றக் கூடாது என கிறிஸ்தவர்கள் தூண்டுதலில் தடுத்ததால் தற்போது இந்துமுன்னணி புகாரின்பேரில் கிறிஸ்தவ சர்ச் ஆக்கிரமித்து வைத்திருந்த 70×6 = 420 சதுரஅடி அரசு இடத்தில் இருந்த கட்டிடங்களை தென்காசி மாவட்ட வருவாய்துறையினர் இடித்து அகற்றினர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















