இந்தியா வந்துள்ள அமெரிக்க ராஜதந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அளித்த பேட்டி உலக கவனம் பெறுகின்றதுபாதுகாப்பு, உலக அமைதி உள்ளிட்ட பல விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து செயலபடுவோம் என அவர்கள் அறிவித்திருக்கும் கூட்டறிக்கை உலக வல்லரசுகளின் புருவங்களை சுருக்க வைத்திருக்கின்றது.
ஆனானாபட்ட இஸ்ரேலின் கோரிக்கைக்கே செவிசாய்க்கா பிடன் அரசு இந்தியாவுக்கு தன் அதிமுக்கிய ராஜதந்திரியினை அனுப்பின் வைத்திருப்பதும் அவரின் கூட்டறிக்கையும் இந்தியா அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியா நாடு என்பதை சொல்கின்றன இந்தியா உலக அரங்கில் மிகபெரிய இடம் மோடி ஆட்சியில் பெற்றிருக்கின்றது என்பதற்கான சான்றுகள்
இந்தியா உலக வல்லரசின் அபிமான நாடு எனும் நிலையினை பெற்றிருப்பது மோடி அரசின் ஆக சிறந்த சாதனை, உலகளவில் இந்தியாவுக்கான மிகபெரிய அங்கீகாரம் இது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய் ஷங்கர் கூறுகையில் : சர்வதேச அளவிலான பயங்கரவாத அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள, இந்தியா – அமெரிக்கா ஒற்றுமையாக நிற்கின்றன. பயங்கரவாத குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை தடுப்பது, பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றில் இந்தியா – அமெரிக்கா இணைந்து பணியாற்றுகின்றன.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது.இரு நாடுகளுக்கு இடையே உறுதியான உறவும், ஒத்துழைப்பும் வலுவான நிலையில் உள்ளன. வரும் நாட்களில் இந்த உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைமைகளும் உறுதியுடன் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : ஸ்டாலினி ராஜன்