தி.மு.க வெற்றி பெற்றததுக்கு காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களோ மறைந்த கருணாநிதியோ திமுகவினரோ இல்லை. தி.மு.க வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறுபான்மை மக்களே காரணம் என சிறுபான்மையின தலைவர்கள் பேசி வருகிறார்கள்.380 கோடி கொடுத்து தி.மு.க விற்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்கு காரணம் இல்லை.
தி.மு.க வெற்றி பெற்றதற்கு நாங்கள் போட்ட பிச்சை என கிறிஸ்துவ பாதிரியார் கூறினார். அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தது கழகம். ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார்.
தற்போது இந்த இரு பேச்சையும் ஆம் என்று சொல்லும் வகையில் திமுக அமைச்சரே பேசியுள்ளார். திமுக வெற்றிக்கு கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபம் தான் காரணம் என சொல்லியுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய , பால்வளத்துறை அமைச்சர் நாசர்: முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள், சிறுபான்மையினர் நலன் கருதி, பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மைருக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் ஆட்சி செய்தனர். ஆனால், தற்போதைய மத்திய அரசின் ஏழு ஆண்டு கால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன.
இதே ஜெபகூட்டத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என, மூவரும் உள்ளோம். இதுவே மத நல்லிணக்கம்; மத ஒற்றுமை. நம்நாட்டில் உள்ளவர்கள் பல்வேறு மொழிகள், மதங்களை சார்ந்து இருந்தாலும், அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வருவதால், இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினா