தமிழக பா.ஜ.க தலைவவராக முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை பதவியேற்ற பின்னர் இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு தளம் அதிகரித்துள்ளது. அவர் மீடியாவை எதிகொள்ளும் விதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. பா.ஜ.கவின் தலைவராக பொறுப்பேற்க கோவையிலிருந்து ஜூலை 14 ஆம் தேதி பதவி ஏற்க புறப்பட்ட அண்ணாமலை அவர்களுக்கு வழியெங்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இது பா.ஜ.கவினருக்கு புது தெம்பை அளித்துள்ள நிலையில் அண்ணாமலையை தலைவராக்கியது மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.இது திராவிட கட்சிகளுக்கு சற்று பீதியை கிளப்பியது.
மேலும் கடந்த இரு ஆண்டுகளாக பா.ஜ.க வின் வளர்ச்சி தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி வேல் யாத்திரை பட்டி தொட்டியெங்கும் பேச வைத்தது. இந்நிலையில் வெற்றி வேல் யாத்திரையைப் போல மீண்டும் ஒரு யாத்திரையை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு ‘ஆசிர்வாத் யாத்ரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த யாத்திரையில் பங்கேற்கும் தலைவர்கள் குறித்தும் பாஜக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாத்திரையைத் சுதந்திர தினத்துக்குப் பிறகு கொங்கு மண்டலமான நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகியப் பகுதிகளில் கொங்கு மண்டல பகுதிகளில் இந்த யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அன்ணாமலை மற்றும் பொது செயலாளர்கள் கே.டி இராகவன் கருநகராஜன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ளார்கள். அங்கு கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை மற்றும் அவரது டீம் , தமிழகத்தில் பா.ஜ.கவின் செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அவர் வந்த பிறகு ஆசிர்வாத யாத்திரை குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.