திமுக எப்படியோ ஆட்சியை பிடித்து விட்டது. ஆட்சியை பிடித்த நாளில் இருந்து மின்வெட்டு ஆரம்பித்தது. அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் மணல் திருட்டு ஆங்கங்கே ரவுடிசம் என திமுகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எப்போது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்கள் என கேட்டால் எப்போது என சொன்னமோ என தமிழக நிதியமைச்சர் பதில் என ஜோராக நடக்கிறது தமிழக அரசு.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி கட்சிகளிடம் பேசி வருகிறது தி.மு.க மேலும் அ.தி.மு.கவிலிருந்து பெரிய தலைகளை தி.மு.க பக்கம் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அவர்கள் மீது வழக்குகள் போடுவதற்கு தயாராகிறது திமுக.
அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் போடவும், பழைய வழக்குகளை துாசி தட்டவும் தி.மு.க., அரசு தயாராகி விட்டது. இதை வைத்து சில அ.தி.மு.க.,தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும், தி.மு.க., பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க, தலைமை சமீபத்தில் மோடியைச் சந்தித்தது. இந்த சந்திப்பிற்கு பின் நிதி அமைச்சகம் பரபரப்பாகியுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் அதற்கான வேலையில் இறங்கி விட்டனர். தி.மு.க., தலைவர்கள் மீதுள்ள வழக்குகளின் கோப்புகள் அனைத்தையும் அலசி வருகின்றனர்.
அவர்களது சொத்து விபரங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடக்கின்றன. இதில் சிலருக்கு வெளிநாடுகளிலும் சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில், தி.மு.க., தலைவர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடக்கலாம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் இனிமேல் துரிதப்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்
இதை எதிர்பாராத திமுக உடனே மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தினை கூட்டியது அதிமுக தலைவர்களிடம் யாரும் பேசவேண்டாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. டெல்லி தி.மு.கவின் பைல்களை எடுத்தால் திமுக அவ்வுளவுதான் என்ற பேச்சு அடிபட தொடங்கியுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை அதிமுக மீது வழக்கோ அல்லது ஆள் பிடிக்கும் வேலையை நிறுத்திவைக்குமாறு திமுக தலைமை அறிவித்துள்ளது.