முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்கள் நடுநிலை தன்மையுடன் செயல்படவேண்டும். மேலும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படக்கூடாது என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி சம்பவத்தை உங்கள் சேனல்களில் எத்தனை முறை காட்டினீர்கள். திமுக ஆட்சியில் சேலத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருத்தரை அடித்தே கொன்றார் அதை எத்தனை முறை செய்தியாக வெளியிட்டீர்கள்.
அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் செய்தியாக ஒருநாள் செய்தியாக சொல்லப்பட்டது ஆனால் தூத்துகுடி சம்பவத்தை தினம் தோறும் செய்தியாக போட்டீர்கள். நடுநிலையோடு செயல்படுங்கள். என செய்தியாளர்களிடமே அவர்களை பற்றி எடப்பாடி பழனி சாமி போட்டுடைத்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















