தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா? ஊர் வம்பையெல்லாம் விலை கொடுத்து வாங்கும் அமெரிக்கா இப்பொழுது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சேட்டையை கண்டு கொள்ளாமல் அமை தியாக ஒதுங்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதுஆப்கானிஸ்தானை ஆட்டைய போட அங்கு நுழைந்தது
சோவியத்யூனியனை விரட்ட தலிபான்களை உருவாக்கி விட்ட து அமெரிக்கா தான் என்றாலும் இப்பொ ழுது தலிபான்களை பாலூட்டி வளர்ப்பது சீனாவும் பாகிஸ்தானும் தான்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கொண்டு வந்து அவர்கள் மூலமாக இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்கு தல்களை நடத்த வைக்க வேண்டும் என்பது தான் சீனா பாகிஸ்தானின் திட்டம் இதற்கு ஏற்றது போல ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக விலகுவதாக அறிவித்து விட்டது.
இதனால் தலிபான்கள் பாடுபடு கொண்ட்டமாகி விட்டது. இப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபரான அஷ்ரப் கானி இந்தியாவின் நண்பர் இதனால் அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு வெளியேறுவதால் தலிபான்களிடம் இருந்து ஆப்கானை காப்பாற்ற இந்தியா உதவி செய்யும் என்று எதிர்பார்த்து
காத்து இருக்கிறார்.
இந்தியாவிடம் ராணுவ உதவியையும் கேட்டு இருக்கிறார்..இந்தியா என்ன முடிவெடுக்க இருக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம் இந்தியாவை பொறுத்த வரை தலிபான்கள் ஒரு புழுக்கள் மாதிரி தான் இந்திய ராணுவ வீரர்களின் பூட்ஸ் கால்களை வைத்தே நசுக்கி அழித்து விட முடியும்.
ஆனால் தலிபான்கள் விசயம் இப்பொழு து சர்வதேச பிரச்சனையாகி விட்டது.உலக நாட்டாமை அமெரிக்காவே விலகி நின்று வேடிக்கை பார்க்கும் பொழுது தலிபான்களுக்கு எதிராக இந்தியா களம் இறங்கினால் ஆட்டம் தரமானதாக தான் இருக்கும்.இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நாடுகள் குரல் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
அது எங்கே போய்முடியும் என்பது அந்த ஆண்டவனு க்கே வெளிச்சம் இருந்தாலும் சர்வதேச அளவில் இந்தியாவின் வல்லமையை காட்ட நினைக்கும் மோடி அரசுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். இந்தியா ஆப்கானிஸ்தானில் புதிய பாராளுமன்றம் மற்றும் சல்மா அணை என்று நிறைய கட்டி கொடுத்து உதவி செய்து இருக்கிறது.
இதில் தலிபான்கள் கை வைக்கும் பொழுது இந்தியாவும் தலிபான்கள் மீது கை வைக்க ஆப்கானிஸ்தானில் களம் இறங்கும் அது வரை தாலிபான்கள் ஆட்டத்தை வேடிக்கை பார்ப்போம்.
.