சினிமாவில் மட்டும் வசனம் பேசி நல்லவர்களாக நடித்தால் போதாது .நிஜத்திலும் நல்லவனாக இருக்க முயற்சி 60 கோடி வரை சம்பளம் வாங்கும் விஜய்க்கு. 40 லட்சம் வரி கட்டுவது பெரிய தொகை இல்லை.நீங்கள் வாங்கிய சொகுசு காருக்கு வரி செலு த்தாமல் தப்பிக்க நினைக்கிறீர்கள்.
இந்த லட்சணத்தில் அரசாங்கம் மருத்துவம் கல்வி இதையெல்லாம் சிங்கப்பூர் மாதிரி இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சினிமாவில் வசனம் பேசுகிறீர்கள்.சிங்கப்பூரில் உங்களை மாதிரி வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்ற நினைத்தால்எப்படி இலவச மருத்துவம் இலவச கல்வி தரமுடியும்?
நடிகர் விஜய் 2012 ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராயல்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதற்கு வரிவிலக்கு கேட்டு அப்போது நீதிமன்றத்தை நாடி இருந்தார் விஜய். இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக நீதிக்காக பாடுபடுவாதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு என அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாது வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார் விஜய்.
நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதம் விதித்தது, மனுதாரர் குறித்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும். மனுதாரரான நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. எனவே அந்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20% போக, எஞ்சியுள்ள 80% ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
இறக்குமதி காரை பதிவு செய்ய நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீது, ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதலும் அவசியம். ஜி.எஸ்.டி சட்டத்திற்கு முன் மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது இறக்குமதி வரி செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி நடிகர் விஜய் தன் காருக்கு மொத்தம் 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தியுள்ளார். முதலில் 8 லட்சம் ரூபாயும் தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தியுள்ளார்.
முதலில் உங்களை மாதிரி ஒரு படத்திற்கு நூறு கோடிகளை சம்பளம் பெறும் நடிகர்கள் ஒழுங்காக அரசுக்கு வரியை கட்டு ங்கள்.அதன் பிறகு ஏழை மக்களின் அவல நிலை பற்றி படத்தில் பேசுங்கள்,
மேலும் இதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக சுமார் 60 லட்சம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது.
அந்த தொகையில் 50 சதவீதத்தை செலுத்திய தனுஷ், பிறகு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் நடிகர் விஜய் வழக்கில் ஆஜரான நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் வந்தது.
உடனே சுதாரித்து கொண்ட தனுஷ் நன் வரி கட்டி விடுகிறேன் வழக்கினை வாபஸ் வாங்கி கொள்கிறேன் என கதனுஷ் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனுஷ் தரப்பை கிழித்து தொங்கவிட்டார். தனுசும் வரி செலுத்திவிட்டார், விஜயும் வரி செலுத்திவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.