வெள்ளை அறிக்கை விட்டு திமுகவை வதம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தற்போது இன்னொரு குண்டை தூக்கி போட்டுள்ளார் அரசு திவாலகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக வேண்டும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்பதாக சென்னைக்கு புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டீ.ஆர் மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது :- திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்வாங்கும் நோக்கம் இல்லை. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பொருளாதாரம் பற்றி சுத்தமாக தெரியாது. அவர் தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். அவரது உளரளுக்கு பதில் சொல்ல முடியாது.
பத்திரிக்கையாளர்கள் அரசு ஊழியர்கள் அகவிலை உயர்த்தப்படுமா என கேட்ட போது பழனிவேல் தியாகராஜன் உளறிகொண்ட நழுவி சென்ற சம்பவமும் அரங்கேறியது .
மேலும் பேசிய நிதி அமைச்சர் பொருளாதாரம் வளர்ந்த மாநிலம் தமிழகம் என்பது உண்மை.அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இன்னும் பல திட்டங்கள் குறித்து எனக்கே தெரியவில்லை.அ.தி.மு க ஆட்சியில் திட்டங்கள் துவங்க கடன் பெற்று பல திட்டங்களை துவங்கப்படாமல் ஊழல் நடைபெற்றுள்ளது அது விரைவில் கண்டறியப்படும்.
ஜெயலலிதா ஆட்சியில் இந்த அளவிற்கு கடன் சுமை இல்லை. பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு நிதி கட்சி துவங்கி அதற்கு பல்வேறு நபர்கள் பாடுப்பட்டுள்ளனர். அரசு திவாலகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக வேண்டும். ஆனால், அது இப்பொழுதா..? பின்னரா…? என கனவு காண்போருக்கு பதில் சொல்ல முடியாது.
அரசின் நோக்கம் வெளிப்படை தன்மை தான். அதன் அடிப்படையில் மட்டுமே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. வருவாய் பற்றாக்குறை உள்ளதை முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒப்புக்கொண்டு விட்டார். மக்களுக்கு எந்த வளர்ச்சியும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்கு பார்வை திட்டம் 2023 – நோக்கம் நிறைவேறவில்லை, என தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















