அப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பு தாலிபான் கைபற்றியது. மக்கள் மரண பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இஸ்லாமிய நாடான அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழ முடியவில்லை!
ஆப்கான் நாட்டில் இருந்து சாதாரண மக்கள் கால் நடையாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் காட்சிகள் ஒரு பக்கம். 12 வயது சிறுமிகளை கதற கதற தலிபான் தூக்கி செல்லும் காட்சிகள் மறு புறம்.
சற்று வசதி படைத்த மக்கள் காபூல் விமான நிலையத்தில் தப்பி செல்ல துடிக்கும் காட்சிகள். அங்கேயும் துப்பாக்கி சூடு, சாவு என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நேற்று நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலால் 100 க்கும் மேற்பட்டோர் பலி குழந்தைகள் 20 பேர் இறந்துள்ளார்ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் நரகமா மாறியுள்ளது.
ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு தலைநகர் காபூலில் வறுமை, வேலையின்மை, அச்சம் போன்றவை மக்களை அலைகழித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலில் தாலிபன்கள் எந்த நேரத்தில் வீட்டுக் கதவை தட்டி இருப்பதை பிடுங்கி விடுவார்களோ என்ற பீதியில் மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா வழங்கிய அனைத்து உதவிகளுடன் சிரமமின்றி வாழ்க்கை நடத்திய ஆப்கானியர்கள் இப்போது எப்படி வாழ்வது என தெரியாமல் உள்ளனர். வங்கிகள் அடைக்கப்பட்டு, ஏடிஎம்கள் காலியாக கேட்பாரன்று கிடக்கின்றன.
அரசு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தலைமையிலான படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் காபூல் மற்றும் சுற்று வட்டாரங்களை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஏற்கனவே நலிந்த நிலையில் இருந்த ஆப்கன் பொருளாதாரம், ஆட்சி மாற்றத்தால் மேலும் சின்னாபின்னமாகி உள்ளது.
அமெரிக்கா, ஐஎம்எஃப் ஆகியவற்றின் நிதி உதவி நிறுத்தப்பட்டு விட்டதால், தாலிபன்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எண்ணெய், கேஸ் ஆகியவற்றின் விலை பலமடங்கு அதிகரித்து விட்டது. ஆக, வறுமையின் கொடும் கரங்களில் காபூல் நகரம் சிக்கி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















