மே 2 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெ(ற்)றியாட்டம் ,நம்மை நிலைகுலைய வைக்கிறது. சொந்தம் ,சொத்து ,அனைத்தையும் இழந்து நிற்கும், மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள்.
திரிணமூல் காங்கிரஸின் (TMC) வெற்றி.ஜனநாயகத்தை புதைத்து அதன் மீது திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. தாக்கப்பட்டவர்கள் பாஜகவிற்கு ஒட்டு போட்டவர்கள் என்று கூறுகிறது.
சிலிகுரி அடுத்துள்ள புதிய ஜல்பாய்குடி போன்ற எல்லைப்புற மாவட்டங்களில் வன்முறையின் கொடுமைகள அதிகம். சுமார் 2200 மக்கள் அடித்து விரட்டப்பட்டும் தப்பித்தும் அஸ்ஸாம் மற்றும் பீஹாரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
5000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு திரும்பவில்லை. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீது பலமான தாக்குதல்கள் நடந்துள்ளன.யாராவது புகார் கொடுக்க காவல்துறை சென்றால் எந்த புகாரையும் வாங்க மறுக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்கட்சியினரையும், பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இதில், 25 பேர் பலியாகியுள்ளனர்.
16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சிபிஐ வி சாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
கூடவே கொல்கத்தா பேட்சை சார்ந்த அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது
.
எஸ்.ஐ.டி விசாரணை என்பது நீதிமன்றம் தலைமை ஏற்று வழி நடத்தும் புலனாய்வு விசாரணையாகும். இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட முடியாது
மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைகளில், பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் பற்றிய விசாரணையை துவக்கியுள்ள சிபிஐ, அது தொடர்பாக 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
அதற்காக சிபிஐயின் 4 சிறப்பு புலனாய்வு குழுக்கள், கொல்கத்தாவில் இருந்து குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் இடங்களுக்கு சென்றுள்ளன.
பெண்களுக்கு எதிரான சில குற்ற வழக்குகளில், தற்போது மாநில போலீசார் விசாரிக்கும் வழக்குகளும் விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















