பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியாக இருப்பவர் தமிழகத்தை சார்ந்த வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ. இவர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பாலும், சேவையாலும் கட்சியின் உயர் பதவிக்கு வந்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவியாக நியமிக்கப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் மகளிரணியை பலப்படுத்த பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு, கட்சியின் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, பாஜக மகளிரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். நேற்று 42 தேசிய செயற்குழு உறுப்பினர்களையும், 11சிறப்பு அழைப்பாளர்களையும் நியமித்து, அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். சிறப்பு அழைப்பாளர்கள் 11 பேரும் மத்திய, மாநில பெண் அமைச்சர்கள் ஆவார்கள்.
இப்பட்டியலில் உள்ள மத்திய பெண் அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, மகேந்திரா முஞ்சபரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் அமைச்சர் அலோ லிபாங், அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் அஜந்தா நியோக்,
கோவா மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் விஸ்வஜித் ராணே, குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர்கள் கண்பத் வாசவே, விபவாரி பென் தேவே, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் ஹலப்பா பசப்பா அசார்,
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் கமலேஷ் தண்டா, இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் சர்வீன் சவுத்ரி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் சுவாதி சிங் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் நியமித்து உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே இத்தகைய ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. இது திராவிட அரசியல் கட்சிகளுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை ஒரு எம்எல்ஏ நியமனம் செய்வது வியப்பு தானே.
பாரதிய ஜனதா கட்சி தன்னை ஒரு வித்தியாசமான கட்சி என்பதை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது.