மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். … மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் இறந்ததை தொடர்ந்து, மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முடிசூட்டப்பட்டார்.
மதுரை ஆதீனமாக பொறுப்பேற்ற கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அனல் பறக்க தனது பேட்டியை அளித்தார். அவர் பேசுகையில்
“சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன்.
கிறிஸ்துவர்களும், முகம்மதியர்களும் இந்து சமயத்தில் தரப்படும் விபூதியைப் பூசிக்கொள்வார்களா? இந்து சமயத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏற்றுக்கொள்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில் “மக்களோடு மக்களாக எப்போதும் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப் பயணம் மேற்கொண்டவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.
எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன்” என்றார் மேலும் அவர் “நித்தியானந்தா இங்கு வந்தால் கைதாகிவிடுவார்” இவ்வாறு அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















