ஆகஸ்ட் 2021க்குள் 60 கோடிப்பேருக்கு தடுப்பூசி கொடுப்போம் என உறுதி அளித்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு.
கடந்த 25 ஆம் தேதி இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமானோருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. இது பல நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகை ஆகும்.
இந்தியாவால் 60 கோடி பேருக்கு எப்படி தடுப்பூசி செலுத்த முடியும் என்றது மோடி எதிர்ப்பு கோஷ்டி. அதற்கு சாத்தியமில்லை நீங்களெல்லாம் வளரும் நாடு உங்கள் இன்ஃப்ராஸ்டிரக்ச்சர் எல்லாம் கிடையாது.
உங்களால் 60 கோடிப் பேருக்கு தடுப்பூசி கொடுக்க முடியும் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்” என்று இந்தியா விரோதி அமெரிக்க சி.என்.என் 2020 டிசம்பரில் இந்தியாவை – மோதி அரசை – கேலி செய்தது.
நேற்றோடு (ஆக்ஸ்ட் 30), இந்தியா 63 கோடிப்பேருக்கு தடுப்பு மருந்து கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனையும் செய்துள்ளது மோதி அரசு. ஒரு சில நாடுகளின் மக்கள் தொகை 1 கோடிக்கும் கீழ் உள்ளது. அந்த நாடுகளில் கூட இன்னும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை .
வரும் அக்டோபர் மாதத்திற்குள் தகுதியுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் (18+) தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இண்டியா.