மூன்றே நாட்களில் காபூலை பிடித்த தாலிபான்கள் இன்று வரை அமருல்லா சாலே இருக்கும் பஞ்ச்ஷீர் பகுதியை நெருங்க முடியவில்லை கவனித்தீர்களா மக்களே…?
ஒரு சிறிய படையை வைத்து பஞ்ச்ஷீர் பகுதியை தாலிபான்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என்றால், 3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை கொண்ட ஆஃப்கன் படைகளால் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபான்களை என்னவெல்லாம் செய்திருக்க முடியும்? ஏன் செய்யவில்லை?
ஆஃப்கானின் முன்னாள் அதிபர் (தற்போது துபாயில் தஞ்சம்) அஷ்ரஃப் கானி இடமும் பைடனிடமும், “இராணுவத்தை என் பொறுப்பில் விடுங்கள். தாலிபான்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற துணை ஜனாதிபதி அமருல்லா சாலேயின் பேச்சை ஏன் கேட்க மறுத்தனர் பைடனும் கானியும்?
“பாகிஸ்தான் ஆதரவுடன் தாலிபான்கள் விரைந்து முன்னேறி வருகிறார்கள். எங்களுக்கு உதவுங்கள் பைடன்” என்று கேட்ட அஷ்ரஃப் கானிக்கு ஏன் பைடன் உதவாமல், “நாம் தோற்காதது போல ஒரு பிம்பத்தை உருவாக்குங்கள்” கூறினார் என்ற சர்ச்சை இப்போது அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தாலிபான்கள் வெற்றிக்கு ஏன் பைடன் உதவினார்?
“அமெரிக்க மக்களிடம் பொய் சொன்ன பைடனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்ற குரல் எழும்பியுள்ளது. பைடன் போனால் கமலா ஹாரிஸ். பைடனை விட கொடுமையான பெண்மணி (?). கம்யூனிஸ்ட் வாதி
தாலிபான்களை ஆஃப்கன் படை தடுக்காததற்கு காரணம்: தலைவர்கள் அஷ்ரஃப் கானிக்கும் பைடனுக்கும் மனமில்லை.
அதே தாலிபானை பஞ்ச்ஷீரில் சிறு படையை கொண்டு அமருல்லா சாலே இத்தனை நாட்கள் எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு சரணடையும் எண்ணமில்லை என்பதை காட்டுகிறது.வெளிநாட்டு உதவிகள் பஞ்ச்ஷீர் வந்தடையுமுன் அதன் கதையை முடிக்க தாலிபான்கள் தீவிரம் காட்டுகின்றன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















