கேரளா மாநிலத்தை சார்ந்த முன்னாள் கத்தோலிக்க பிஷப், பிரான்சிஸ் முல்லக்கல் இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிஷப்பாக பணியற்றிய வேளையில் அங்கு பணியில் இருந்த லுாரி களப்புரா என்ற கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இதையடுத்து, பிஷப் பிரான்சிஸ் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, புகார் அளித்ததும் பிரான்சிசை கைது செய்யவில்லை கஇதன் காரணமாக கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட லுாரி களப்புரா,என்ற கன்னியாஸ்திரியும் பங்கேற்றார்.இதன் காரணமாக, கேரள கத்தோலிக்க திருச்சபை பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மீது , ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தேவாலயப் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, கேரள அரசு நடத்திய, ‘பெண்கள் சுவர்’ போராட்டத்துக்கு ஆதரவாக, கன்னியாஸ்திரி லுாசி, கருத்து தெரிவித்தார்.இது, மதக்கோட்பாட்டுக்கு எதிரானது என குற்றம் சாட்டி, கன்னியாஸ்திரியிடம் விளக்கம் கேட்டு, திருச்சபை சார்பில், ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.
இதற்கு, லுாசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அது திருப்திகரமாக இல்லை என கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக, ஐரோப்பிய நாடான வாட்டிகனில் உள்ள, கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில், லுாசி மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டை, வாட்டிகன் திருச்சபை, நிராகரித்தது.இதன் மீது, மீண்டும் ஒருமுறை மேல்முறையீடு செய்ய, லுாசிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் கன்னியாஸ்திரி லூசியும் 2 வது மேல் முறையீடு மனுவை அனுப்பி வைத்தார். தற்போது “மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது என்று வாட்டிகனில் இருந்து கடிதம் வந்துள்ளது. இரண்டாவது மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அவர் திருச்சபையை விட்டு வெளியேறுவதை தவிர வேறுவழி இல்லை என்றும் கூறப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















