‘ஹிந்து’ என்றாலே எதோ ஒரு கேவலமான வார்த்தை என்பது போல் நம் நாட்டில் பலர் பேசியும் எழுதியும் வரும் நிலையில் பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ரிஷி சனத் தனது ஹிந்துக் கலாச்சாரத்தப் பற்றிப் பெருமிதம் கொள்பவராகவும் அதை உரக்க உலகுக்குச் சொல்பவராகவும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் திரு. நாராயண மூர்த்தி அவர்களின் மாப்பிள்ளையாவார் . இருந்த போதிலும் பிரதமருக்கு அடுத்தபடியாக மிகஉயரிய பதவியை இவர் அடைந்தது இவரது கடுமையான உழைப்பாலும் , அறிவாற்றலினாலுமே.
பகவத் கீதையை சாட்சியாக வைத்துத் தனது பதவிப் பிரமாணத்தை இவர் எடுக்க முடிவு செய்தபோது , பிரிட்டனில் சிலர் அதை எதிர்த்தனர். அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட போது
நான் இப்போது பிரிட்டிஷ் குடிமகன்,ஆனால் எனது மதம் ஹிந்து தர்மமாகும். எனது மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் இந்தியாவைச் சார்ந்ததாகும். . நான் ஹிந்து என்பதைப் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன் ; எனது அடையாளமும் ஹிந்துவே. ‘ என்று கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















