பிரிட்டிஷ் கால ஆண்டான் – அடிமை சட்டங்கள் குப்பையில் வெகுவிரைவில்? இரண்டு ஆண்டு காலமாக பலரது கருத்துகளையும் கேட்ட மத்திய அரசு, இப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் ஆதாரச் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர தயாராகிவருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பொது சிவில் சட்டம். இந்த 3 முக்கிய வாக்குறுதிகளில் 2 நிறைவேற்றியது மோடி அரசு இதில் பொது சிவில் சட்டம் தான் தற்போது எஞ்சியிருக்கும் வாக்குறுதி அந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது மத்திய மோடி தலைமையிலான அரசு இதற்கு வலு சேர்க்கும் விதமாக டெல்லி உயர் நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது.
ஆகஸ்ட் 5 ம் தேதி மோடியின் அரசியல் வாழ்வில் பிரதமராக இருந்து சாதிக்கப்பட்ட இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கிறது. 2019 ஆகஸ்டு 5 ல் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த விசேஷ சலுகை யான ஆர்ட்டிகிள் 370 வது பிரிவு நீக்கப்பட்டது. 2020 ஆகஸ்டு 5 ல் தான் இந்துக்களின் கனவாக இருந்த ராமர்கோயில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டுவதற்கு மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த 2021 ஆகஸ்ட் 5 ல் பொது சிவில் சட்டமா? இல்லை மக்கள் தொகை கட்டுப்பா டா? எது என்று தெரிய வில்லை. மக்கள் தொகை கட்டுப்பாடு பிஸ்கோத் மேட்டர் அதனால் பொது சிவில் சட்டம் தான் நிறைவேற இருக்கும் என்றுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் காவல்படை அமைப்புகளும் என்.ஜி.ஓக்களும் நீதிமன்றங்களும் பார் அசோசியேஷன்களும் தங்கள் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தந்ததை அடுத்து இந்த முடிவு.குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் ஆதாரச் சட்டம் ஆகியவற்றோடு, தேசதுரோக சட்டம் (sedition), வெறுப்பு பிரச்சாரங்கள் / குற்றங்கள் (hate crimes), கருணை மனு (mercy petition) தவறாக பயன்படுத்துவதை தடுப்பது என பல விவகாரங்களுக்கும் தீர்வு தரும் வகையில் திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!—> இந்த CrPC / IPC சட்ட திருத்தங்களையடுத்து நீதித்துறை சீர்திருத்தம் (கொலீஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இண்டியன் ஜுடிஷியல் சர்வீஸ்), காவல்துறை சீர்திருத்தம் எல்லாம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு.
2 ஆண்டுகளுக்கு மேலாக அவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது அரசு.காவல்துறை சீர்திருத்தத்தில் ஒன்று: இப்போதிருக்கும் பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து நியமிக்கும் (லஞ்ச) முறை மாறி, +2க்கு பிறகு மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் “போலீஸ் அகாடமி”யில் ‘பட்டப்படிப்புக்கு’ சேர்ந்து படித்து தேர்ந்தவர்கள் காவல்துறை பொறுப்புகளில் (யுபிஎஸ்சி போல ஆன்லைன் / வெளிப்படைத்தன்மையுடன்) அமர்த்தப்படுவார்கள் என்று செய்தி வந்தது. சீர்திருத்தங்கள் அத்தனையும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும். லஞ்சத்தை ஒழிக்கும். ஜனநாயகத்தை பலப்படுத்தும். காத்திருப்போம் !
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















