தி.மு.க-வில் ‘சமூகநீதி’ எப்போது கடைபிடிக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே??
“ஈ.வெ.ராமசாமி பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் – 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!”
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் கொண்டாடுவது இருக்கட்டும்.
இவர்கள் தம்பட்டம் அடிக்கும் ஈ.வெ.ராமசாமியின் “சமூகநீதி” தி.மு.க கட்சியில் எப்போது கடைபிடிக்கப்படும்? 71 ஆண்டுக்கால தி.மு.க வரலாற்றில் ஒரு பட்டியலினத் தலைவர் கூட வர முடியவில்லையே? எத்தனை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பட்டியல் பிரிவினர்? அனைத்திற்கும் மேலாக பட்டியல் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து தி.மு.க-வின் ஊதுக்குழல் “முரசொலி” அலுவலகம் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இன்று இல்லை அடுத்த 100 ஆண்டுகளில் ஒரு பட்டியலினத்தலைவரை தி.மு.க பெற்றிருக்கும் என்ற உத்திரவாதத்தை திரு.ஸ்டாலின் அவர்களால் அளிக்க முடியுமா? இயலாது. காரணம், தி.மு.க தலைமைப்பீடம் என்பது கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே என விதி அமைக்கப்பட்டு விட்டது. வேறு எவரும் அந்த பதவிக்கு எக்காலத்திலும் வரவே முடியாது. இதுதான் ஈ.வெ.ரா வகுத்த சமூகநீதியா?
சொந்த இயக்கத்தில் “சமூகநீதி” கடைபிடிக்க மனமில்லாதவர் தமிழகத்திற்கே சமூகநீதி நாள் கொண்டாடுவோம் என்பது நகைப்புக்குறியது மட்டுமே.
என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் SG.சூரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















