உத்திர பிரதேச பா.ஜ.க மகளிர் அணி செயற்குழு கூட்டம் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி வானதி சீனிவாசனை புகழ்ந்து பேசியது வைரலாகி வருகிறது அவர் பேசியதாவது
பாரதீய ஜனதா கட்சி மகளிரணி தலைவியும் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் நமது உத்திரபிரதேசத்திற்கு வருகைபுரிந்துள்ளார்..அவரது தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
வானதி சீனிவாசன் மிகுந்த உற்சாகத்துடன் பாஜகவின் கொடியை ஏந்தியவாறு களப்பணி ஆற்றிவருகிறார். உண்மையில் அவர் பாஜக மகளிரணியின் அனைத்து சகோதரிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக பணிபுரிந்து வருகிறார்.
சாதகமில்லாத சூழ்நிலையிலும் அங்கு அவர் பணியாற்றி வருகிறார்.அமைப்பு ரீதியான கட்டமைப்பு இல்லாத பகுதியிலும் ஆதரவு கிடைக்காத பகுதியிலும் எந்தவிதமான வாய்ப்பும் இல்லாத பகுதியிலும் தனியாக பா.ஜ.கவிற்காக தொடர்ந்து போட்டியிட்டு சிங்கம் மலைப்பகுதியில் எதிரியை எதிர்கொள்வது போல போராடி வரும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் நமது உபிக்கு வந்துள்ளார்.
உங்கள் அனைவருக்கும் அவர் இங்கு வழிகாட்டினார்.. அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து வரவேற்கின்றேன்.அவர் உங்கள் அனைவருக்கும் தகுதியான வழிகாட்டுதலை அளித்துள்ளார்..உங்கள் அனைவருடன் இணைந்து பாஜக மகளிரணியை வலுப்படுத்துவதற்காக இங்கு வந்துள்ளார்..மிக குறுகிய காலகட்டத்தில் பெரிய எண்ணிக்கையில் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















