தமிழக பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறும், தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விட்டு புகழ் பாடும் சட்டமன்றமாக உள்ளது. மக்களை ஏமாற்றும் கூட்ட தொடராக இது அமைந்துள்ளது என பல கட்சிகள் விமரிசித்து வருகின்றது.
பல அறிவிப்புகள் அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி சட்டமன்றத்தை நடத்தி வருகிறது.மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி மற்றும் ஸ்டாலின் புகழ்பாடும் ஊதுகுழலாக இருக்கிறார்கள்.
தமிழக பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி வந்த அவர், தற்போது இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து முடியாது; அடுத்த ஆண்டு பார்ப்போம் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்ய முயல்வது எதற்கு என்றால், திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கல்வி தந்தையர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் தொழில் பாதிக்கபடும் என நீட் தேர்வை ரத்து செய்ய துடிக்கின்றனர். நீட் தேர்வை திமுகவினர் குடும்பத்தினர் மட்டும் ரத்து செய்ய நினைக்கின்றனர்.
திமுக அரசின் 130 வது நாள் சாதனை என்னவென்றால் சட்டமன்றத்தில் மக்களுக்காக நேரம் ஒதுக்காமல் ’24ஆம் புலிகேசி’ படத்தில் வரும் காமெடி போன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஸ்டாலினையும் அவரது மகனையும் புகழ்ந்து வருகின்றனர்.