தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாகநடைபெற உள்ளது. பெரிய கட்சிகள் கூட்டணி பேசுச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக அதிமுக கூட்டணிகளுக்கு இடையே தான் உள்ளாட்சி தேர்தலில் பலத்த போட்டி இருக்கும்.
சிறிய கட்சிகளான நாம் தமிழர் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்த நிலையில் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தீயாக பரவியது .
நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது.
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை சந்திர சேகருக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இது வேற என ரசிகர்கள் நொந்துபோயுள்ளார்கள். இதன் காரணமாக விஜய், எஸ் ஏ சியிடம் பேசுவது இல்லை. விஜய் தாய் மற்றும் தந்தை மீது வழக்கு தொடர்ந்து உள்ளது சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது.
தி.மு.கவின் அச்சுறுத்தல் காரணமாகவே விஜய் அரசியலுக்கு வர பயத்தில் உள்ளார் என்கிறது சினி வட்டாரங்கள். அடுத்த ரஜினி!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















