சென்னையை சேர்ந்த, ஸ்ரீதரன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் இந்து அறநிலைய துறை குறித்து ஒரு மனு தாக்கல் செய்தார்: அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஹிந்து சமய அறநிலைய துறை சட்டத்தின்படி, அறநிலைய துறையில் பணியாற்றும் ஆணையர், இணை, துணை, உதவி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். சட்டம் மற்றும் விதிகளின்படி, அறநிலைய துறையில் நியமிக்கப்படுபவர்கள், அதற்கான உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.
கோவில் நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர்கள் குழு தலைவர் முன்னிலையில், சாமி சிலை முன், உறுதிமொழி எடுக்க வேண்டும். அதற்கான, இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும்.எனவே, இந்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள், பிறப்பால் இந்துவா, இந்து மதத்தை பின்பற்றுகின்றனரா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இது குறித்து, அறநிலைய துறையிடம் கேட்டபோது, பதில் இல்லை. அதனால், இந்து என, உறுதிமொழி எடுக்காதவர்களை, பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்ரீதரன் என்பவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட , நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. அறநிலைய துறை சார்பில், சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜரானார். அறநிலைய துறை ஆணையர் வரையிலான பதவிகளை வகிப்பவர்கள், எட்டு வாரங்களில் உறுதிமொழி எடுப்பதை, அரசு உறுதி செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே போல் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் என உறுதிமொழி ஏற்க வேண்டும் ஆணையர் முதல் ஊழியர்கள் வரை 8 வாரங்களுக்குள் உறுதிமொழி ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Get real time update about this post categories directly on your device, subscribe now.















