விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஓ எஸ் மணியன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை நடந்தேறுவது மட்டுமல்ல தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை என குற்றஞ்சாட்டினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 130 நாட்களில் 202 அறிவிப்புகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார் ஆனால்3, 4 அறிவிப்புகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் 150 ரூபாய் மட்டுமே ஏற்றப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை ஏமாற்றுகிற அரசாக திமுக உள்ளதாக கூறினார்.
உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே விருது பெற்ற அரசு அதிமுக அரசு தான் எனவும் விவசாயிகள் , ஏழை தொழிலாளிகள் நிறைந்த மாவட்டத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி பயில ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதை அமைச்சர் பொன்முடி பல்க்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைத்து விழுப்புரம் மாணவர்களுக்கு துரோகம் இழைத்தவர் பொன்முடி என தெரிவித்தார். தமிழக முழூவதும் நெல் கொள்முதல் செய்வதில் அரசும், அதிகாரிகளும் அலட்சியம் காடுவதாகவும் மக்களுக்கு உணவளிக்கிற விவசாயிகளின் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், அதிமுக ஆட்சுயில் 13 ஆயிரம் கோடி பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இழப்பீட்டினை அதிமுக அரசு வழங்கியதாக கூறினார்.
திமுக அரசு பயிர்கடன், நகைகடன் தள்ளுப்படி செய்யவில்லை குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்காத ஒரே அரசும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது திமுக தான் எனவும் மாணவர்கள் இளைஞர்கள், முதியோர்களை ஏமாற்றிய கட்சியாக திமுக உள்ளதாக அம்மா மினி கிளினிக்கள் திறக்கப்பட்ட நிலையில் அதையே படிப்படியாக திமுக அரசு மூடி வருவதாகவும்,மக்கள் மத்தியில் அம்மா கிளினிக்கு நல்ல பெயர் ஏற்பட்டதால் அதனை ஸ்டாலின் அரசு முடக்கபார்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு யாரையெல்லாம் நாடினோமோ அவர்களை தான் திமுக அரசு நாடி தொழில் தொடங்க வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழாவில் 568 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக அரசு அடிக்கல் நாட்டி செயல்படுத்தி வருவதாகவும், இதில் அரசியல் ஆதாயம் திமுக தேடுவாதாக கூறியுள்ளார்.பல மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலில் நேர்மையாக நடைபெற்றது.எந்த தேர்தல் வந்தாலும் ஜனநாயக முறைப்படி அதிமுக தேர்தலை சந்திக்கும் ஒரே கட்சியாக உள்ளது.கள்ள ஓட்டு போடுவதில் வல்லவர்கள் திமுகவினர் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















