தெற்கு டெல்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் பகுதியில் உள்ளது அன்செல் பிளாசா ஹோட்டல். இந்த ஓட்டலுக்கு சேலை கட்டி வந்த சில பெண்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். அதோடு “எங்கள் உணவகத்தில் நவ நாகரீக ஆடைகளை அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிப்போம். சேலை கட்டியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று குண்டை தூக்கி போட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய பாரம்பரிய ஆடையான சேலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், உடனடியாக இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவிற்கு புகார் அளித்தார். அந்த உணவகத்தை உடனடியாக மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி அஞ்சல் பிளாசா உணவகம் மூடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ, “சேலை அணிந்து சென்ற பெண்களுக்கு டெல்லி உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சேலை என்பது இந்திய பெண்களின் அடையாளம்” என்றார்.