கேஸ் விலை பெட்ரோல் விலை குறைப்பதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக அரகண்டநல்லூர் அருகே பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!
தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகே பாஜக சார்பில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் துளசி ராஜா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் துணைத் தலைவர் கருப்பு. முருகானந்தம் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ரேஷன் அரிசி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மற்றும் கிராமப்புற பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட ஏராளமான இத்திட்டங்களை பாஜக அரசு பொது மக்களுக்கு செய்துள்ளதாகவும். அதேபோன்று;கேஸ் மற்றும் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொண்டு உள்ளோம் எனவும், பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி கொண்டு வர உள்ளோம் எனவும், அதற்கு மோடி தயாராகி விட்டதாகவும்.
ஆனால் இந்த மீட்டிங்கிற்கு இங்குள்ள தமிழக நிதியமைச்சர் போகவில்லை எனவும் கூறினார். பெட்ரோல் ஜிஎஸ்டிக்குள் வரத்தான் போகிறது எனவும், மோடிஜி கொண்டு வரத்தான் போகிறார் எனவும் அவர் பேசினார். இதனை எதிர்ப்பது திமுக தான் எனவும், ஏனெனில், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பெட்ரோல் விலையை குறைக்கவேண்டும் எனவும், ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் எனவும், ஆளுங்கட்சியாக வந்தது பின்னர் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக் கூடாது எனவும் கூறினார்.
மேலும், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் தொன்னுத்தி எட்டு ரூபாய் பெட்ரோல் அறுபத்தி எட்டு ரூபாய் முதல் 72 ரூபாய்க்கு வந்து விடும் எனவும் அதற்கு பாஜக தயாராக உள்ளதாகவும் அண்ணாமலை பேசினார். மேலும், எதற்கெடுத்தாலும் இங்கிருப்பவர்கள் மோடியை குற்றம் சொல்கின்றனர் எனவும் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















