“வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்…” –
வடநாட்டவர் மத்தியில், வடநாட்டவர் மொழியில், மகாகவி பாரதி பாடலை பாடி, தமிழுக்கு பெருமை சேர்த்த வீரத்தமிழச்சி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ…!
=====
உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் பாஜக மகளிரணி தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. பாஜக மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் எம்எல்ஏ பொறுப்பேற்ற பிறகு, அகில இந்திய அளவில் பெண்கள் மத்தியில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வெளிப்பாடாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் மிகுந்த உற்சாகத்துடன், சிறப்பாக நடந்து முடிந்தது.
இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை சேர்ந்த மிகப்பெரிய புரட்சி கவிஞர், சுப்பிரமணிய பாரதியார். அவர், “வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்…” என்று பாடியுள்ளார். இதன் மூலம் அவர் தேச ஒற்றுமையை வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலம் தமிழகம். அந்த மாநிலத்தில் இருந்து வந்த தமிச்சி நான். நான் உத்தரகண்ட் வந்து இந்த புனித மண்ணை மிதித்ததும், எனக்கு மகாகவி பாரதியாரின் “வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்…” என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வந்தது. நமது தேசத்தின் ஒற்றுமையை அவர் எவ்வளவு அழகாக வலியுறுத்தி பாடி உள்ளார்.
இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மகாகவி பாரதியாரை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது அங்கு இருந்த இந்தி பேசும் மக்களிடம், அவர் இந்தியில் பேசி விளக்கினார். இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி அவர்கள் வரவேற்றனர்.
“தமிழின் பெருமையை, தமிழர்கள் மத்தியில், தமிழ் மொழியில் பேசுவதை விட வடநாட்டில் வட மொழியில், வடவர் மத்தியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ எடுத்துரைத்துள்ளார். இதுவே உண்மையான தமிழ்த் தொண்டு” என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஐபிஎஸ், பாராட்டினார்.
தமிழை விற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த வானதி சீனிவாசன் எம்எல்ஏவை, பல்வேறு தரப்பினரும் பாகுபாடு இன்றி பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















