ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இப்போது இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த பணிகள் வெற்றிகமராக முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் உலகின் பல வளர்ந்த நாடுகள் கூட தங்கள் விண்கலன்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவை அணுகுகிறது.அடுத்தகட்டமாக இஸ்ரோ இப்போது ஸ்பேடெக்ஸ் (SPADEX-Space Docking Experiment) திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்வெளியில் இரு செயற்கைகோள்களை இணைக்கும் முயற்சியை இஸ்ரோ கையில் எடுத்தது.
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. கடந்த வாரமே இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது தாமதம் ஆனது.
இதற்கிடையே விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு இந்தியாவாகும்
இஸ்ரோ வெளியிட்ட பதிவில், ” இரண்டு செயற்கைகோள்களுக்கும் இடையான 15 மீ தூரம் 3 மீ-ஆக குறைக்கப்பட்ட பிறகு, டாக்கிங் துல்லியமாக தொடங்கப்பட்டது. இது வெற்றிகரமான விண்கலம் இணைப்புக்கு வழிவகுத்தது. பின்னர் இந்த இணைப்பு திரும்பப் பெறும் நிகழ்வும் சுமூகமாக முடிந்தது. அதைத் தொடர்ந்து மற்ற செயல்முறைகளும் வெற்றிகரமாக முடிந்தது.” என பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள். இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். https://x.com/isro/status/1879749119759311078
https://x.com/narendramodi/status/1879755467964256701
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















