தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் 2026 இல் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. வரலாற்றில் திமுக இதுவரை தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியை கைப்பற்றியது இல்லை என்பதற்கு பெரிய காரணமாக கூறப்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்சனை, நிர்வாக சீர்கேடு இதையெல்லாம் தாண்டி அந்தந்த மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள நிர்வாகிகளின் அட்டூழியங்களை பெரும் பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவராக இருக்கும் அன்பழகன் என்பவர் ஏற்கனவே பலமுறை சர்ச்சைகளில் சிக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நெடுஞ்சாலையை மறித்து இவர் பிறந்தநாள் கொண்டாடியது மற்றும் கட்டப்பஞ்சாயத்து விவகாரங்கள் குறித்தும் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பேசியதை புறம் தள்ளிவிட முடியாது. இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய முருகர் கோயில் முத்துமலை முருகன் கோவில் ஆகும். இந்த கோவிலை முருகனின் தீவிர பக்தர் கவனித்து வருகிறார். மேலும் கோவிலுக்கு செல்வதற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் இருந்தது, இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பேரூராட்சி தரப்பில் ஒரு டோல்கேட் அமைத்து வாகன வசூலில் ஈடுபட்ட வருவது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் எந்த வாகன வசூலும் செய்யப்படுவதில்லை என்று ஏத்தாப்பூர் பேரூராட்சி சார்பாக தகவல் அளிக்கப்பட்ட போதிலும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டாயமாக 50 ரூபாய் 70 ரூபாய் 100 ரூபாய் வரை கட்டாய வாகன வசூலில் ஈடுபட்டு கல்லா கட்டி வருகிறார். . அன்பழகன். அந்த பகுதியில் எந்த வித சுற்றலா தலமும் இல்லை. முருகன் கோவில் அமைந்த பிறகு தான் அந்த இடமே உலகிற்கு தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருவதை பார்த்த திமுக அரசாங்கம் டோல் கேட்டை போட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சஷ்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இது சம்பந்தமாக இந்து இயக்கங்கள் பலமுறை தங்களது கண்டனங்களை தெரிவித்த போதிலும் வாகன வசூல் ஈடுபடுவது நிறுத்தப்பட்ட பாடு இல்லை. இந்த நிலையில் கட்டப்பஞ்சாயத்தின் மூலம் கோயிலுக்கு பின்புறம் உள்ள 57 சென்ட் நிலத்தை 67 லட்ச ரூபாய் கொடுத்து ரொக்கமாக அவர் வாங்கியுள்ளார் என அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். .
அதுமட்டுமில்லாமல் பத்திரப்பதிவு சட்டத்தின் படி இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பண பரிவர்த்தனை செய்ய அனுமதி இல்லை என்ற போதிலும் பத்திர பதிவுத்துறை இந்தப் பதிவுக்கு எப்படி அனுமதி அளித்தது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பேரூராட்சி தலைவர் ஆவதற்கு முன்பு வரை எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இருந்து வந்த அன்பழகன் அவர்கள் இந்த நான்கு வருட காலங்களில் பல இடங்களில் நிலங்களை வாங்கியதும் புதிய வீடுகளை கட்டியும் திடீர் குபேரனாக வளர்ந்தது எப்படி என பேரூராட்சி மக்களே கேள்வி கேட்கும் அளவிற்கு திகைப்பில் ஆழ்த்தியுள்ளது அவரது வளர்ச்சி.
காண்ட்ராக்ட் டெண்டர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தின் மூலம் கல்லாக்கட்டும் அன்பழகனால் அந்தப் பகுதியில் திமுக தனது செல்வாக்கை இழந்து வருவது திமுக தலைமைக்கு தெரியாதா என திமுக நிர்வாகிகளே புலம்பியும் வருகின்றனர். உடனடியாக இவரது கட்டப்பஞ்சாயத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் முடிவு கட்டவில்லை எனில் திமுக தலைமை இந்தப் பகுதிகளில் உள்ள வாக்குகளை மேலும் இலக்கும் எனவும் மாநில தலைமை உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் திமுக நிர்வாகிகளே போர் கொடி தூக்கி உள்ளது சேலம் மாவட்ட திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















