தமிழக பாஜக தலைவர் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் இந்த யாத்திரை தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அண்ணாமலையை நோக்கி நகர்கிறார்கள். இதனால் திராவிட கட்சிகள் கலக்கமடைந்துள்ளது.
மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மேடையில் தான் அண்ணாமலை தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளன. பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட இண்டி கூட்டணி ஒருபக்கம் கரைந்து வருகிறது, கூட்டணியை உருவாக்க ஆச்சாரமாக இருந்த நிதிஷ் குமார் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க பக்கம் சென்றார்.மம்தா தனித்து போட்டியிடுவேன் என கூறிவிட்டார்.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் அப்படியான சலசலப்புகள் உருவாகவில்லை.தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியின் தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் செல்லும் என்பதே விடை தெரியாத வகையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்னர் ஏற்கெனவே கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தங்கள் பின்னால் வந்துவிடும் என்று அதிமுக தரப்பு கருதியது. ஆனால் அப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை. எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் தான் அதிமுக பக்கம் நிற்கின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. புதிய நீதிகட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கட்டாயம் பாஜக பக்கமே செல்லும் என்று கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடும் தெளிவுபடுத்தப்படவில்லை. அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி பாஜக பக்கம் நகரும். சசிகலாவையும் அந்த பக்கம் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பாஜக தனிப்பட்ட முறையில் வளர்ந்துவிட்டது என்பதை டெல்லிக்கு காட்ட முயற்சித்து வருகிறார் அண்ணாமலை. அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து சில இடங்கள் வெற்றி பெற்றாலும், அதன் கிரெடிட் அதிமுகவுக்கே சென்றுவிடும். ஆனால் பாஜக தனித்து போட்டியிட்டோ, அல்லது அவர்கள் தலைமையில் ஒரு அணியை அமைத்து போட்டியிட்டாலோ அதன் மூலம் வாக்கு சதவீதம் மட்டும் அதிகரித்தால் கூட அண்ணாமலையின் செல்வாக்கால் தான் சாத்தியமானது பாஜகவின் அடுத்தகட்ட பயணத்துக்கு அது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் திருப்பூர் பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அந்த விழாவில் ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரை மேடையில் ஏற்ற வேண்டும் என்று அண்ணாமலை தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
மோடியை காட்டி திட்டமிட்டபடி அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்துவிட்டால் அதுவே அண்ணாமலையின் கிராஃபை பெரியளவில் உயர்த்தும். அதே சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு அது கடும் நெருக்கடியை உருவாக்கிவிடும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















