“இந்த வழக்கு மகா முக்கியமான வழக்கு, ஆனால் போதிய ஆவணங்களை சி.பி.ஐ சமர்பிக்கவில்லை, அவர்கள் பொறுப்பில் இருந்து தவறிவிட்டனர்.
இதனால் சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு சாதகம்
எனும் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யபடுகின்றார்கள்”
ஆம், இது ஜோடிக்கபட்ட வழக்கு என்றோ பொய்வழக்கு என்றோ நீதிபதி சொல்லவில்லை, சிபிஐ அமைப்பை சாடி வழக்கை முடித்தார்.
அன்றைய சிபிஐ திமுகவினை மிரட்டும் ஒரு வேட்டை நாயாக காங்கிரஸால் வைக்கபட்டிருந்தது, அது திமுகவினை கடிப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை
உண்மை இப்படி இருக்க ஆ.ராசா எப்படி எல்லாம் கதைகட்ட கிளம்ப்விட்டார் பார்த்தீர்களா?
தமிழகத்தில் காங்கிரஸை வெட்டிவிட கத்தியினை ராசா கையில் கொடுத்து அனுப்பியிருக்கின்றது திமுக தலமை
அதனால்தான் இந்த வார்த்தைகள் எல்லாம் வருகின்றன, அதாவது ஜோடிக்கபட்ட வழக்கு என்றால் ஜோடித்தது யார்?
சாட்சாத் காங்கிரஸ்..
அதிமுக பிரிந்தபின் காங்கிரஸ் அல்லாத கூட்டணியிலெல்லாம் திமுக மண்ணை கவ்வி அது தொண்டை வழியாக வயிறுவரை இறங்கியது தமிழக தேர்தல் வரலாறு
மறுபடியும் அதை நோக்கி அதாவது மண்ணை நோக்கியே செல்கின்றது திமுக..