கடந்த வாரம் 2 ஆம் தேதி சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் வெள்ளி வியாபாரி சங்கர் இவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. வெள்ளி வியாபாரி சங்கர் இவர் கடந்த 2ம்தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கருப்பு நிற ஸ்கேர்ப்பியோ கார், சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது அந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் சங்கரை திட்டமிட்டுதான் கொலை செய்துள்ளார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கொலையினை சங்கரின் தங்கை கணவர் சுபாஷ்பாபு கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கொலை செய்வதற்கு ரூ. 2 லட்சம் கொடுத்து கொடுத்தாக சுபாஷ்பாபு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார் பவானியில் மீட்கப்பட்டது. இந்த கொலைக்கு திட்டம் போட்டு அரங்கேற்றிய அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் கொலை தொடர்பாக செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த திமுக பிரமுகர் அப்துல் முனாப் (30), கருங்கல்பட்டி கல்கி தெருவை சேர்ந்த பிரபல ரவுடி வேலாயுதம் (38), காடையாம்பட்டி பிரதாப் (30), ஈரோடு கவுந்தம்பாடி நாகராஜன் என 4 பேரை கைது செய்துள்ளார்கள் காவல்துறை.
இதில் வேலாயுதம் மீது 2 கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை தொடர்பாக முக்கிய தகவல்களை அவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.