மே 2ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெ(ற்)றியாட்டம் ,நம்மை நிலைகுலைய வைக்கிறது. சொந்தம் ,சொத்து ,அனைத்தையும் இழந்து நிற்கும், மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள்..காரணம் திரிணமூல் காங்கிரஸின் (TMC) வெற்றி.ஜனநாயகத்தை புதைத்து அதன் மீது திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. தாக்கப்பட்டவர்கள் பாஜகவிற்கு ஒட்டு போட்டவர்கள் என்று கூறுகிறது ஆய்வு அறிவிக்கை.
சிலிகுரி அடுத்துள்ள புதிய ஜல்பாய்குடி போன்ற எல்லைப்புற மாவட்டங்களில் வன்முறையின் கொடுமைகள அதிகம். சுமார் 2200 மக்கள் அடித்து விரட்டப்பட்டும் தப்பித்தும் அஸ்ஸாம் மற்றும் பீஹாரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.5000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு திரும்பவில்லை. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீது பலமான தாக்குதல்கள் நடந்துள்ளன.யாராவது புகார் கொடுக்க காவல்துறை சென்றால் எந்த புகாரையும் வாங்க மறுக்கின்றனர். அடிபட்ட காயம்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் அளிக்கப்படவில்லை . சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே அதை மீறுகிறது.
சுமார் 2000 கிராமங்களில் நடந்தேறிய இந்த வெறிச்செயலில் நமது 6000 பேர் பாதிப்பட்டிருக்கிறார்கள்.கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீடு கடைகளை தாக்குதல் என கொடுமைகளின் பட்டியல் கணக்கில் அடங்காதது. இந்து அமைப்புகளின் 12 அலுவலகங்களும் , அதன் ஊழியர்களின் வீடுகளும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது. ஹிந்து வியாபார நிறுவனங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன.மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் நவகாளி மற்றும் தேசப் பிரிவினையின் போது ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களையே மீண்டும் நினைவு படுத்தும் வகையில் இருக்கிறது.காவல்துறையும் வேடிக்கைப் பார்க்க இக்கொடூரங்கள் அத்தனையும் நடந்தது.
இந்த சம்பவம் குறித்து, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்ற சமூக அமைப்பு சார்பில், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது. இக்குழு ஆய்வறிக்கையை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் நேற்று வழங்கியது.இது குறித்து கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்கட்சியினரையும், பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இதில், 25 பேர் பலியாகியுள்ளனர். 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏராளமான வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, வாழ்வாதாரங்களை இழந்து, அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த அறிக்கையை, உச்ச நீதிமன்றத்திடம் வழங்கி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோருமாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தி, வன்முறைக்கு துணை போன அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.