தமிழகத்தில் தனெக்கென்று முத்திரை பதித்து நடித்து வருபவர் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் பொதுசேவை மட்டுமல்லாமல் பைக் ரேஸ் கார் ரேஸ் ஆட்டோமொபைல் ஏரோநாட்டிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வமுடன் செயல்படுபவர். , இந்தியாவில் விமானிகளுக்கான லைசென்ஸ் பெற்றுள்ள வெகுசில நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார்.
சென்னை எம்ஐடி-யைச் மாணவர்களின் ”டீம் தக்க்ஷா” என்ற குழு ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவை தயாரித்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றன. இந்த குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் குமார் இருக்கிறார். இந்த குழு தயாரித்த ட்ரோன்கள் கொரோன தொற்று காலத்தில் கிருமி நாசினி கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் மருந்து உபகரணங்கள் வழங்குவதிலும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் மழைக்காலத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கும், பல இடங்களைக் கண்காணிக்கவும் உதவியது இந்த குழு.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் டீம் தக்க்ஷா குழுவினருக்கு இந்திய ராணுவம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 டிரோன்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்த சாதனைக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் தொடர்ந்து டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரிக்க இந்த குழுவிற்கு ஆர்டர் வந்துள்ளது. இதற்காக ரூபாய் 165 கோடியை ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த குழுவினர் அடுத்த சில மாதங்களில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரித்து டெலிவரி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரோன்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காகவும், மருத்துவ மற்றும் அவசர பொருட்களை கொண்டு செல்லும் பணிக்காகவும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது.
நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினரின் திறமைக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















