ஜெய் பீம் பட விவகாரம் தொடர்ந்து பூதாகரமாகி வரும் நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடாக இல்லை.தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் முதலில் அனைவரும் ஒன்று திரண்டு சூர்யாவிற்கு ஆதரவு கொடுத்தார்கள்.
விஷம் பெரிதாக பெரிதாக ஒவ்வொருவராக விலகிவிட்டார்கள். பெயர் அளவில் சூர்யாவை ஆதரித்தவர்கள் தற்போது வாய்திறக்க மறுக்கிறார்கள். இதற்கு காரணம் இனி சூர்யா படங்களை திரையரங்குகளில் வெளியிட்டால் அந்த திரையரங்கு முன் போராட்டம் வெடிக்கும் என வன்னிய சமுதாய சங்கங்கள் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாய மக்கள் வன்னிய சமுதாயம். இதன் காரணமாக சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் தற்போது விலகிவிட்டார்கள். ஏன் ஆளும் கட்சி நிறுவனமே சூர்யாவை கை விட்டது. எதற்கும் துணிந்தவன் படம் வெளிவருவது பெரும் சிக்கல் என்பதால் சன் பிக்சர் நிறுவனம் பின்வாங்கியுள்ளது.இதன் பின் தான் இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கேட்டார்.
ஆனால் அது தீர்வாகவில்லை. சூர்யா தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் தான் எனவே அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னிய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
மேலும் வன்னியர்கள் குற்றவாளிகள் தொனியில் இப்படம் எடுக்கப்பட்டு அதற்கு திருமா ஆதரவு கொடுத்தது தான் இங்கு பிரச்சனையை கிளப்பியது. இந்த படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது. முறையான அனுமதி வாங்கவில்லை. மேலும் அந்தோணிசாமியை வேண்டுமென்றே குருவாக சித்தரித்தது வன்னிய சமுதாய மக்களின் அக்கினி கலசத்தையும் பயன்படுத்தி வன்னியர்களை ஓட்டுமொத்தமாக இழிவுபடுத்தியதாக வன்னியர் சமுதாய மக்கள் குமுறிவருகிறார்கள்.
ஆனால் நடிகர் சூர்யாவோ குடும்பத்தோடு துபாயில் துயில் கொள்ள கிளம்பிவிட்ட்டார் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















