தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. அவர் பரத நாட்டியத்திலும், ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு இருப்பது நான் செய்த பாக்கியம், அதிர்ஷ்டம். கன்னியாகுமரியில் இருந்து ஷிர்பவானி, கொட்டேஷ்வரிலிருந்து காமாக்யா, ஜெகன்னாத்திலிருந்து கேதர்நாத், சோம்நாத்திலிருந்து காசி விஸ்வநாத் என்று இன்று நாட்டின் அனைத்து இடங்களும் ராமர் நம்பிக்கையில் மூழ்கியுள்ளது என்று கூறியிருந்தார்.
இருப்பினும் ராமர் கோவில் கட்டுவதில் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதில் தனது ஆதரவை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளார் பிரபல நடிகையான சுகன்யா. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.
ராமர் மீது தனக்குள்ள பக்தியை வெளிப்படுத்தும் விதமாக , நடிகை சுகன்யா, நெற்றியில் வில்லுடன் ராமரின் உருவப்படத்தை வரைந்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் மிக பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது ஆதரவு பெருகி வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















