கடந்த சில வாரங்களாக பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தாலும் வீடியோ ஆடியோ கால்களில் மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுகிறார்கள். இதனால் மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். சில மாணவிகளால் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். சொன்னால் மதிப்பெண் குறைத்து விடுவார்களே என்ற பயத்தில் இருக்கிறார்கள். இது தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல அரசு பள்ளிகளிலும் தொடர்கிறது.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் தேர்வாய் கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள 6 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த், உதவி காவல் ஆய்வாளர் சிவா ஆகியோர் சுந்தரராஜன் கைதுசெய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசு பத்ம சேஷாத்ரி பள்ளி மீது புகார் எழுந்த போது எடுத்த நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஊடகங்கள் இது போன்ற விஷயத்தில் நடுநிலையோடு செயல்பட்டு அனைத்து பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை வெளி கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான் பெற்றோர்கள் வைக்கும் கோரிக்கை. அனைத்து பள்ளிகளின் மீதும் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















