தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் கல்யாணி! சிறுவயதில் இருந்து சினிமா துறையில் இருந்ததால் இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். அள்ளித்தந்த வானம் ஜெயம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்ந்த பின் இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்த கதநாயகிகள் சில நபர்கள் தான் அதில் கல்யாணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி திரையில் சில பிரச்சனைகள் காரணமாக அதன் பின் படங்களில் நடிக்காமல் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். முக்கியமா இவர் விஜய் டிவியில் இவர் நடித்த ஆண்டாள் அழகர் பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்ஸ் மிக பிரபலம். டிவி ஷோக்களில் ஆங்கராகவும் பணியாற்றினார். தற்போது திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு எண்டு கார்டு போட்டார் கல்யாணி.
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நான் ஏன் மீண்டும் நடிக்க வரவில்லை என்பதை மனம் திறந்து பேசினார் கல்யாணி அவர்கள் அவர் கூறியதாவது: சினிமாவில் இருந்து ஒதுங்கியதற்கு என்னை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே காரணம் எனக் கூறியுள்ளார். படங்களில் நடிக்க வேண்டுமென்றால் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என சில இயக்குனர்கள் கேட்டனர். கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என என் அம்மாவிடமே கூறினர். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரே Me too குற்றச்சாட்டை வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து நடிகர் இயக்குனர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் பாலியல் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் விஷால் அவர் துறையில் நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்பாரா? இது குறித்து அறிக்கை தான் விடுவாரா ? சமூக நீதி பேசும் இயக்குனர்கள் சினிமா நீதி பேசுவார்களா? என்ற கேள்வி மேலோங்கி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















