ஜி.கே. வாசனை மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வேட்பாளாராக அதிமுக அறிவித்தது குறித்து, பாஜகவின் அழுத்தம் காரணமா என்ற கேள்வியை உருவாக்கி குடைந்து கொண்டிருக்கிறார் நெல்சன் நியுஸ் 7 தொலைக்காட்சியில்
மாநிலங்களவைத் தேர்தலில் தனது தோழமைக் கட்சியைச் சேர்ந்த.
மக்களவைத் தேர்தலில் தனித்து வெல்லும் வலிமை இல்லாத ஒரு தலைவருக்கு இடம் அளிப்பது என்பது ஜெயலலிதா கடைப்பிடித்த ஆரோக்கியமான நடைமுறை.
உதாரணம் : மார்க்சிஸ்ட் கம். கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன்.
அந்த நடைமுறையை இப்போது (ம்) அதிமுக தொடர்கிறது.
ஆனால் அதை மறந்து, மறைத்து மாநிலங்களவைத் தேர்தலி பாஜகவை நுழைத்து அதிமுக, பாஜக இரண்டின் மீதும் வெறுப்பைப் பூசும் அரசியல் செய்ய முனைகின்றனர் நியூஸ் 7ம், நெல்சனும் .
பாஜகவின் அழுத்தம் என்றால்
- பாஜக தனது கட்சியினருக்கு க் கேட்காமல் ஏன் த.மா.கா விற்குக் கேட்க வேண்டும்?
- மோதியின் அட்மைரர் என்ற நோக்கில் வாசனுக்குக் கேட்கப்பட்டிருக்கும் என்று லஷ்மி சுப்ரமணியம் சொன்னார். அப்படியானால் கடந்த தேர்தலுக்குப் பின் நாடாளுமன்ற வளாகத்திலேயே மோதியால் பாரட்டப்பட்ட பிரமலதாவிற்கு கோராதது ஏன்?
இது காமன் சென்ஸ் கேள்விகள் . அது கிடக்கட்டும்
நாளை வெயில் 32 பாகை காயும் என வானிலை முன்னறிவிப்புச் சொல்கிறது.
அதற்குக் காரணமான பாஜகவையும் அதனால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள்ள அதிமுகவையும் விவாதிக்க நியூஸ் 7ம் விவாதக் குழுவும் தயாராவது நல்லது.
https://www.facebook.com/732076743/posts/10156740152651744/
கட்டுரை:- Maalan Narayanan