உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,3.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலகம் பரவியது. இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பரவ காரணம் தப்லிக் ஜமாத் அமைப்பினர் என்பது நிதர்சனமான உண்மை.
மார்ச் மாதத் தொடக்கத்தில் புதுதில்லியில் நிஜாமுதீன் மார்க்கஸில் நடைபெற்ற தப்லிக் இ ஜமாஅத் நிகழ்வு நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30% க்கும் அதிகமான உயர்வுக்கு வழிவகுத்தது, இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று கொரோனோ பரவலை அதிகரிக்க செய்தார்கள்.
இந்த நிலையில் தப்லிக்கால் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து மாநாட்டில் பங்கேற்ற உறுப்பினர்கள், 35 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டனர் பின் 4000 தப்லீக் இ ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லியிலிருந்து அவரவர் ஊருக்கு செல்ல டெல்லி அரசு அனுமதித்தது. மேலும், தில்லி போலீஸ் விசாரணையில் பெயரிடப்பட்டிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லி காவல்துறை தப்லிக் ஜமாத் மீது தகுந்த ஆதாரங்களின்படி, 20 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்கின்றது இதன் முதல் குற்றப்பத்திரிகையில் , மார்கஸ் நிகழ்வில் கலந்து கொண்ட 83 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 20 குற்றப்பத்திரிகையில் தப்ளிக் இ ஜமாஅத்தின் 2000 உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்படுமென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தப்லீக் மாநாடு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும், கூட்டம் கூட தூண்டிவிட்டதாகவும் தில்லி குற்றப்பிரிவு போலீஸார், பின்னர் மார்கஸ் தலைவர் மௌலானா சாத் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வில் இருந்து பெறப்பட்ட ஆடியோ டேப்களில், கொரோனா வைரஸைப் பற்றி அறிவியல்பூர்வமற்ற மற்றும் மத விரோத கூற்றுக்கள் பரப்பப்பட்டது தெரியவந்தது. மேலும் நம்பிக்கை அடிப்படையிலான துணிச்சலான பிரச்சாரமும் இங்கே மேற்கொள்ளப் பட்டது தெரியவந்தது.