புதுதில்லியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கேந்திரியபந்தர் மற்றும் கொள்கை மற்றும் தலைமைத்துவ மையம் ஒருங்கிணைத்த ஸ்வச்சதாவுடன் மகாத்மா காந்தியின் பரிசோதனைகள்-அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.
மத்திய இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு), வடகிழக்கு பிராந்தியங்களின் வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக்குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இந்த நிகழ்ச்சியில் கூறுகையில், “வேளாண்மை மற்றும் கிராமிய செழிப்பு ஆகியவை காந்திஜியின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.
இதன்காரணமாக விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு இன்றைக்கு நிறைவேற்றுவதைப் பார்த்து காந்திஜி மகிழ்ச்சி அடைந்திருப்பார்” என்றார். “சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்து மோதியின் அரசால், கிராமத்தை, வேளாண்மையை மையப்படுத்திய காந்தியின் கண்ணோட்டம் புதிய வேளாண்மை சட்டங்கள் மூலம் உண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
“வேம்பு பூசப்பட்ட யூரியா, மண் வள அட்டை, கிசான் கடன் அட்டை, பிரதமரின் கிசான்சாமான் நிதி, ஃபாசால்பீமா யோஜனா உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன” என்றும் அவர் கூறினார்.
“முதன்முறையாக வேளாண் சமூகத்தினர் சுதந்திரமாக தேர்வு செய்யும் விருப்பத்தை கொடுத்ததால் இவை இந்திய வேளாண்மையின் ஜனநாயகமயமாக்கலின் பிரதிநிதித்துவ நடவடிக்கைகளாக இருந்தன” என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
“புதிய வேளாண்மை சட்டங்கள் இந்திய விவசாயத்துக்கு உந்துதலை மட்டும் கொடுக்கவில்லை. முழுமையான உலகளாவிய தளத்தைக் கொடுத்துள்ளது.விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இந்த சட்டங்கள் உயர்த்தும்” என்றும் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















