ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற 10 தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்து உள்ளது அதிமுக. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் முக்கிய தலைவர்கள் தலையெடுக்க தொடங்கி உள்ளனர்.
தோல்விக்கு மறுபெயர் எடப்பாடி என அதிமுக நிர்வாகிகளே கூற ஆரம்பித்து விட்டார்கள். தொடர் தோல்விகளால் எடப்பாடி பழனிச்சாமியை மாஜி அமைச்சர்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி சிலரோடு கூட்டு வைத்து கொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. என தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்ட தேனி ஆண்டிபட்டியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளது. அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னமும் போய்விடும். என்ற நிலையில் தான் அதிமுக எடப்பாடி தலைமயிலான அதிமுக உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினார். பின்னர் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வத்தையும் ஓரங்கட்டினார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கு வந்த பிறகு தொடர்ந்து 10 தோல்விகள் ஏற்பட்டுள்ளன. எம்பி தேர்தலில் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சேர்க்காததால்தான் தோல்வி என்று பலரும் எடப்பாடிக்கு அறிவுரை கூறினார்கள். தெற்கில் அதிமுக எப்படி சரிந்தது. 8 சதவிகித வாக்குகள் எப்படி காலியானது. அதிமுக தெற்கில் எப்படி மோசமாக சொதப்பியது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி எல்லாம் தனி ஆட்கள் என்றால் அதிமுக வாக்குகள் ஏன் சரிகிறது. என கேள்வி மேல் கேள்வியை எழுப்பியுள்ளார்கள் சீனியர் அமைச்சர்கள்.
இந்த நிலையில் வரிசையாக 10 தோல்விகளில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது இது குறித்து அதிமுக மாஜி அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த முறை 6 அமைச்சர்கள் இன்னும் 15 நாட்களுக்குள் முடிவெடுக்கவிட்டால் அடுத்த முறை 12 பேர் கூட வரலாம். எடப்பாடி பழனிசாமி இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்தால் எடப்பாடியைபொது குழு கூட்டி நீக்கிவிடுவார்கள்.என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் 15, 20 நாட்களில் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மிகப்பெரிய அளவில் வெடிக்கப்போகிறது என்ற தகவலும் எடப்படியின் காதுகளுக்கு சென்றுள்ளதாம்.
இந்த நிலையில் அதிமுகவில் செங்கோட்டையன் – எடப்பாடி இடையே பனிப்போர் அதிகரித்துள்ளது.அதிமுகவில் எடப்பாடியை விட சீனியர் செங்கோட்டையன். செங்கோட்டையன் எம்எல்ஏவாக இருந்தவர்.சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது அவரை பாதுகாத்தவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை அவ்வளவு நம்பியவர் ஜெயலலிதா. லோக்சபா , சட்டசபை தேர்தல்களில் ஜெயலலிதாவிற்கு எல்லாமுமாகவே இருந்தவர் செங்கோட்டையன்.
ஆனால் திருப்பூர், ஈரோடு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு கூட எடப்பாடி செங்கோட்டையனிடம் ஆலோசனை கேட்கவில்லை. லோக்சபா தேர்தல் தொடர்பாக எதையும் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இதனால் செட்டாகவில்லை.அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி , தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை விஜயபாஸ்கர் என முக்கிய மாஜி அமைச்சர்களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பியுள்ளார்களாம்.
செங்கோட்டையன் தலைமையில் இவர்கள் எல்லாம் ஒன்றாக கூட போகிறார்கள். கொங்கு மண்டல லீடருக்கும் டெல்லிக்கு ஒரு சாமியாருக்கு இடையில் தொடர்பு உள்ளது. வேலுமணி, தங்கமணி, கேவி ராமலிங்கம் எல்லோரும் எடப்பாடிக்கு எதிராக திரும்ப உள்ளனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க வாய்ப்புகள் உள்ளன.