போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது.
மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள் வரை இந்திய விமானப்படை இயக்குகிறது. இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது. தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது.
போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள, 200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















