தமிழகத்தில் நாள் தோறும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 1500 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துவருகிறது. அரசும் பல்வேறு காட்டுப்பாடுகள் விதித்து வந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியம். ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனவை விரட்ட முடியும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா ஒன்று பாதிப்பு அதிகமாககாணப்படும் சிவப்பு நிற பகுதிகளில்கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணிகளை அரசு நிர்வாகம் செய்து வருகிறது. அந்த பணிகளில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நடிகர் அஜித் தான் இந்த ஆலோசனையை அரசிற்கு வழங்கினாராம் என்ற செய்தி காட்டு தீயை போல் பரவி வருகிறது . இது குறித்து ஒரு ஆங்கில டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கு கொண்ட டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். அந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் ட்ரோன்கள் மூலமாக கிருமி நாசினிகளை தெளிக்கும் ஐடியாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜித் தான் கொடுத்தார் என் கூறினார். நடிகர் அஜித் அறிவுரை வழங்கி வரும் தக்ஷா என்ற குழு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்த குழுவானது அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்தது
அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களைத் நடிகர் அஜித் அறிவுரையின் பேரில் உருவாக்கியுள்ளனர். இதனைக் கொண்டு அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவில் கிருமி நாசினிகளை தெளித்து விடலாம். இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்று வெற்றி அடைந்துள்ளது.