வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். , தன் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு பிளாக் மெயில் செய்துள்ளார்கள்
மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல், இந்த வீடியோவைத் தர வேண்டும் என்றால், தாங்கள் சொல்லும் இடத்துக்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளது. பதற்றத்தில் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற மாணவியிடம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.
அங்கிருந்து தப்பி வந்த மாணவிக்கு மீண்டும் போன் செய்து மிரட்டிய அந்த கும்பல், 5 ஆயிரம் ரூபாய் பணம் தராவிட்டால் வீடியோவை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவிடப் போவதாக பிளாக் மெயில் செய்துள்ளது.
தாங்கள் விரும்பும்போது அழைத்த இடத்துக்கு வர மறுத்தாலும் வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த கொடுமையை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க இயலாமல் தவித்த மாணவிக்கு, வீடியோ குறித்து விவரம் அறிந்த வேறு சில இளைஞர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் கடுமையான மன வேதனையடைந்த சிறுமி, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 90% காயங்களுடன் மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.மாதர் சங்கம் சமுக நீதி பேசுபவர்கள் எல்லாம் இந்த சம்பவத்தை பற்றி வாய் திறக்காமல் உள்ளார்கள். சாதி பார்த்து பெண்களுக்கு நீதி கேட்கும் சமுதாயம் உள்ள வரை பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு