வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், சிறந்த எழுத்தாளர் மற்றும் ஒரு அரசியல்வாதி ஆவார். சமுதாயத்தில் நிலவிய சாதிபாகுபாடுகள் மற்றும் தீண்டாமைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். புரட்சியில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷாரால் வீர் சாவர்க்கருக்கு இரட்டைஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் செல்லுலார் சிறைக்கு சாவர்க்கர் அனுப்பப்பட்டார். பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்.
விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம்தான் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. இந்த படத்தினை ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ளர். இப்படத்தின் திரைக்கதையை ரன்தீப் உடன் உட்கார்ஷ் நைதானி என்பவரும் எழுதியுள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – அந்தமானின் காலாபாணி சிறையில் சாவர்க்கர் நடந்து செல்லும் காட்சியோடு ட்ரெய்லர் தொடங்குகிறது. “அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்று பின்னணியில் வரும் வாய்ஸ் ஓவரோடு, சிறையில் சாவர்க்கர் பட்ட துன்பங்கள் காட்டப்படுகின்றன. வன்முறை தீர்வல்ல என்று கூறும் மகாத்மா காந்தியிடம், வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சாவர்க்கர் பேசுவதாக வரும் வசனம் கவனிக்க வைக்கிறது. ட்ரெய்லரின் பரபரப்பான காட்சிகளுக்கு பின்னணி இசையும், சீரியஸ்தன்மை கொண்ட ஒளிப்பதிவும் வலு சேர்க்கின்றன. ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ ட்ரெய்லர் வீடியோ:
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















